/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடையூறாக கல்வெட்டு பாலம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
/
இடையூறாக கல்வெட்டு பாலம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
இடையூறாக கல்வெட்டு பாலம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
இடையூறாக கல்வெட்டு பாலம் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 02, 2024 02:52 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை, 16 கி.மீ., உள்ளது. இச்சாலையில் ஏரி, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து நீர் விவசாய நிலங்கள், அருகே உள்ள நீர்நிலைகளுக்கு உபரிநீர் செல்ல சாலையில் தேவையான இடங்களில் கல்வெட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாலங்காடில் நட்டேரி நீர் விவசாய நிலங்களுக்கு பாயும் வகையில் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது சாலையை ஒட்டி உள்ளதுடன் தடுப்போ, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் 'ரிப்ளக்டர்' அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே கல்வெட்டு பாலம் உள்ள இடத்தை இரவில் வாகன ஓட்டிகள் அறியும் படி ரிப்ளக்டர் மற்றும் தடுப்புகளை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.