/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2024 10:57 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில், 124 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில் அரசு சார்பில் 113 அங்கன்வாடி மையங்களும், தனியார் பங்களிப்பில் 11 அங்கன்வாடி மையங்களும் செயல்படுகின்றன.
இங்குள்ள அங்கன்வாடி மையங்களிலும், குறைந்தது, 15 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.இவற்றில் சுற்றுச்சுவர் இல்லாமல், 80க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மேலும் திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, சின்னகளக்காட்டூர், பொன்னாங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் ஒட்டி அமைந்துள்ளன. இதனால், குழந்தைகள் வெளியில் வந்து விளையாட முடியாத நிலை உள்ளது.
மேலும், குழந்தைகள் அறியாமல் சாலையில் வந்துவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சமாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சாலையோரம் உள்ள அங்கன்வாடி மையங்களில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

