நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்,ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார், 48,  இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சுனில்குமார், இரண்டு மகன்களுடன், தக்கோலத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படை குடியிருப்பில் வசித்து வந்தார். மன விரக்தியில் இருந்து வந்த சுனில்குமார், நேற்று அதிகாலை, வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

