/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
அடுக்குமாடி குடியிருப்பு பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 21, 2024 08:35 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக 9 திட்டப் பகுதிகளில் 1,106 கோடியில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில், தாழவேடு-520, முருகம்பட்டு-1040, பூச்சிஅத்திபேடு-1152, அருங்குளம் பகுதி 1ல்- 432, அருங்குளம் பகுதி 2ல்-912, அருங்குளம் பகுதி 3ல்-768 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள பணி, 3 மாதத்திற்குள் நிறைவு பெற்று, மக்களுக்கு வழங்கப்படும். மப்பேடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியினை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாக்கம் மற்றும் நுாம்பல் திட்டப்பகுதிகளில் நீதிமன்ற வழக்குள் விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.