/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2025 07:52 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில், 120 ஊராட்சிகளில், பல்வேறு திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி துறையின் திருத்தணி கோட்ட உதவி செயற்பொறியாளர் கோமதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், நான்கு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ஒன்றியங்களில் வளர்ச்சி பணிகள் எந்த அளவில் உள்ளது என, ஒன்றியம் வாரியாக விவாதிக்கப்பட்டது. பின், ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தார்ச்சாலைகள் தரமான முறையில் அமைக்க வேண்டும் என, உதவி செயற்பொறியாளர் கோமதி அறிவுறுத்தினார். இதில், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.