/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் திட்ட பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
/
கடம்பத்துாரில் திட்ட பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
கடம்பத்துாரில் திட்ட பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
கடம்பத்துாரில் திட்ட பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 08, 2025 01:30 AM

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், நேற்று, கடம்பத்துார் ஒன்றியம், பள்ளியரைகுப்பத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிழல் வளைகுடில் அமைத்து மிளகாய் மற்றும் கத்திரி நாற்று பயிரிடப்பட்டதை பார்வையிட்டார்.
அவர்களுக்கு தேவையான விதைகளை துறை வாயிலாக கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
கடம்பத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வெளி நோயாளிகள் எண்ணிக்கை, மருந்துகள் இருப்பு, மகப்பேறு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். சத்திரை மேட்டு காலனியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும், 53 வீடு கட்டும் பணியை மே இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
கல்லம்பேடு பகுதியில் ஏலப்பாக்கம் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் சீரமைப்பு பணி, புதுப்பட்டு பகுதியில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் சாகுபடி குறித்தும் கேட்டறிந்தார்.
கொப்பூர் பகுதியில், 'மிக்ஜாம்' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டப்பட்டு வரும் திட்ட பணிகளை மார்ச் இறுதிக்குள் நிறைவேற்ற அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் வேதவல்லி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெபகுமாரிஅனி உட்பட பலர் பங்கேற்றனர்.