/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தின்றி பாதுகாப்பாக பணிபுரிய மின்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
/
விபத்தின்றி பாதுகாப்பாக பணிபுரிய மின்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
விபத்தின்றி பாதுகாப்பாக பணிபுரிய மின்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
விபத்தின்றி பாதுகாப்பாக பணிபுரிய மின்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜன 29, 2025 08:36 PM
பொன்னேரி:தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின், பொன்னேரி கோட்டத்தின் சார்பில், நேற்று மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம், நடந்தது.
சென்னை வடக்கு மண்டல பொறியாளர் சகாயராஜ் தலைமை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் ஜெயச்சந்திரன், பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மின்சார பணிகளின்போது, மின் விபத்தை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய பாது காப்பு வழிமுறைகள் குறித்தும், விதிமுறைகளை கடைபிடிக்காதபோது, ஏற்பட்ட விபத்துகள் குறித்தும் காணொளி காட்சி வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மின்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாவது:
வேலைக்கு தகுந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும். மின்இயக்கம் உள்ள இடங்களில், ரப்பர் கையுறைகளை அணியாமல் கருவிகளை கையாளக்கூடாது. மின்கம்பங்களில் ஏறும்போது கைக்கயிறுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எர்த்ராடு கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
அனைவரும் எச்சரிக்கையுடன், பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, பொன்னேரியை விபத்து இல்லாத கோட்டமாக மாற்ற உறுதி ஏற்கவேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது.

