ADDED : மார் 15, 2026 05:59 AM
திருவள்ளூர்: குடிநீர், கழிவு நீர் உள்ளிட்ட குறைகளை தீர்வு செய்ய, 'புனல்' ஒருங்கிணைந்த குடிநீர் குறை தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான, அனைத்து புகார்களையும், பொதுமக்கள் பதிவு செய்ய, 'புனல்' ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் குறைதீர் அழைப்பு மையத்தை நிறுவியுள்ளது.
இந்த இணையதளத்தில், குடிநீர் வழங்கல், கழிவு நீர், கழிவு நீர் குழாய், குடிநீர் பற்றாக்குறை, பராமரிப்பு தொடர்பான பிரச்னைகள் அல்லது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் இருந்து, வரும் நீர் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.
தமிழகம் முழுதும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கான ஒருங்கிணைந்த பொது கால் சென்டர் எண்: 1916ல் அழைக்கலாம். Punal.tn.gov.in என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியான 'punal.citizen' மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலம் 94999 91916 என்ற எண்ணிலும், பொதுமக்கள் தங்களின் குடிநீர் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
