/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் ஏரி சீரமைப்பால் நீர்வெளியேற்றம் ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்

ADDED : அக் 18, 2024 02:28 AM

சோழவரம்:சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. ஏரியின் கரைகள் சேதம் அடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரையின் உள்பகுதியில் கான்கிரீட் சுவர் அமைத்து, சரிவுகளில் பாறைகள் பதிக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரும் ஷட்டர்கள் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏரியில் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து, தற்போது, 0.16 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. வினாடிக்கு, 1,099 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில், அவற்றை ஷட்டர்கள் வழியாக புழல் ஏரிக்கு, வினாடிக்கு, 81கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு உள்ளது.
மேலும், ஏரியின் வடக்கு பகுதியில் உள்ள கலங்கலின் ஒரு பகுதியில், இரண்டு ஷட்டர்கள் அமைக்கபடுகிறது. இவற்றின் வழியாகவும் ஏரிக்கு வரும் தண்ணீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. ஷட்டர் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.