/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டையில் நவரைபருவ நெல் அறுவடை பணி தீவிரம்
/
ஆர்.கே.பேட்டையில் நவரைபருவ நெல் அறுவடை பணி தீவிரம்
ஆர்.கே.பேட்டையில் நவரைபருவ நெல் அறுவடை பணி தீவிரம்
ஆர்.கே.பேட்டையில் நவரைபருவ நெல் அறுவடை பணி தீவிரம்
ADDED : மார் 17, 2024 01:24 AM

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில், சொரணவாரி, சம்பா, நவரை என மூன்று பருவமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தாலும், ஆறுகள், ஓடைகள், ஏரிக்கரை ஒட்டிய வயல்வெளியில், நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. இந்த ஆற்றில் கரையோர கிராமங்களில், நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இதே போல், மாவட்டத்தில் முக்கிய ஆறுகளான கூவம், ஆரணி, நந்தி ஆறுகளின் கரையோர பகுதியிலும் ஆண்டுக்கு மூன்று பருவமாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. டிச., மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான நவரை பருவ அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் அருகே ஞானகொல்லிதோப்பு ஓடையின் கரையோர வயல்வெளியில் விவசாயிகள் நெல் அறுவடையில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று மாதங்களில் அறுவடைக்கு வரும் குண்டு ரக நெல், எந்தவித சிக்கலும் இன்றி எளிதாக பயிராவதால், விவசாயிகள் அதிகளவில் குண்டு ரக நெல் பயிரிடுகின்றனர்.
பொன்னி உள்ளிட்ட ரகங்கள், ஆறு மாத கால பயிராகும். ஆறு மாதங்களுக்கு பாசன வசதி இருந்தால் மட்டுமே இந்த ரக நெல் பயிரிடுவது சாத்தியம் ஆகும். ஆனால், மழைக்காலத்தில் நிரம்பும் நீர்நிலைகளின் நீராதாரத்தை நம்பி பயிரிட, மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நெல் ரகங்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

