/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழத்தோட்டத்திற்கு பாசன வசதி தீவிரம்
/
பழத்தோட்டத்திற்கு பாசன வசதி தீவிரம்
ADDED : அக் 27, 2024 01:27 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தின் வடக்கில், மலை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், பழத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு பழமரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
இந்த மரங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்த புதிதாக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. இதன் வாயிலாக, கழாய் பதித்து மரங்களுக்கு நிரந்தமாக தண்ணீர் வசதி ஏற்படுத்தும் பணி தற்போது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பழ மரங்களுடன், காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த தோப்பில் விளையும் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் கிடைக்கும் வருவாய், ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படுகிறது.