/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக்கடன்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக்கடன்
ADDED : பிப் 16, 2024 07:31 PM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் வீடுகளுக்கு, பங்குத்தொகை செலுத்த வட்டியில்லா வங்கிக்கடன் பெறவிண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகைக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நபர் ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை பெறப்படும் கடன் தொகைக்கு, 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.