/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகள் தின ஓவிய போட்டி
/
மாற்றுத்திறனாளிகள் தின ஓவிய போட்டி
ADDED : நவ 22, 2025 02:07 AM
திருவள்ளூர்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவிய போட்டி நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, டிச., 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில், மாவட்ட அளவில் நடந்த போட்டியில், 160க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நான்கு பிரிவுகளில் நடந்த ஓவிய போட்டி யில், செவித்திறன், மூளை முடக்குவாதம், பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்டோர், அவர்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரைந்தனர்.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

