/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்வதேச கிக் பாக்சிங்: தமிழகம் அபாரம்
/
சர்வதேச கிக் பாக்சிங்: தமிழகம் அபாரம்
ADDED : பிப் 13, 2024 06:36 AM

சென்னை: 'வாக்கோ இந்தியா' சார்பில் 3வது சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, புதுடில்லியில் 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டியில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 34 பெண்கள் உட்பட 90 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில், 7 முதல் 9 வயது மற்றும் சீனியர், மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து போட்டிகள் முடிவில், இந்திய அணி 197 தங்கம், 209 வெள்ளி, 249 வெண்கலம் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியனானது. அதைத்தொடர்ந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பிடித்தன.
இந்திய அணியில், தமிழ்நாடு அமெச்சூர் சங்கம் சார்பில் பங்கேற்ற வீரர்கள், 54 தங்கம், 43 வெள்ளி, 31 வெண்கலம் வென்று, நாட்டின் சாதனைக்கு பெரும் பங்காற்றினர்.
தொடர்ந்து, மஹாராஷ்டிரா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஹரியானா சங்கங்களின் சார்பில் பங்கேற்றவர்கள், முறையே அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.