/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்வதேச யோகா விழா மாணவர்கள் அசத்தல்
/
சர்வதேச யோகா விழா மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 10, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, ஜன. 10--
புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில், இம்மாதம், 4, 5, மற்றும் 6ம் தேதிகளில், புதுவையில், 30வது சர்வதேச யோகா திருவிழா நடைபெற்றது. அதில் நடைபெற்ற யோகாசன போட்டியில், 800க்கும் மேற்பட்ட இருபால் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
வயது வாரியாக பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினா ஸ்ரீயோகா மையத்தைச் சேர்ந்த மாணவர்கள், எம்.ஹரிஷ், 13, எஸ்.சீத்தேஷ், 12, ஆகியோர் அவரவர் வயது பிரிவில் முதல் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பயிற்சியாளர் காளத்தீஸ்வரன், சக மாணவர்கள் பாராட்டினர்.

