/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுபட்ட விண்ணப்பதாரருக்கு நாளை நேர்முக தேர்வு
/
விடுபட்ட விண்ணப்பதாரருக்கு நாளை நேர்முக தேர்வு
ADDED : டிச 04, 2024 11:40 PM
திருவள்ளூர்,
ரேஷன் கடை ஊழியர் தேர்வில் பங்கேற்க இயலாதோருக்கு, நாளை நேர்முக தேர்வு நடைபெறும்.
திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் 75 விற்பனையாளர், 34 கட்டுனர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டன.
இந்த காலி பணியிடங்களுக்கு, கடந்த நவ.25 முதல் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கு, மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், நாளை, பிற்பகல் 1:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.