/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு
/
திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு
ADDED : செப் 04, 2025 02:19 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என மூன்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் வாயிலாக, திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளி, திருத்தணி, அத்திமாஞ்சேரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கும்மிடிப்பூண்டி, எளாவூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.