நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, விஷ்ணுவாக்கம் கிராமத்தில் எல்.அன்டி., நிறுவன கிடங்கு உள்ளது. இங்கு சாலைப் பணிக்காக பயன்படுத்தப்படும் இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று முன்தினம் மாலை அங்கிருந்த, 63 இரும்பு ராடுகள் காணாமல் போனது. இதுகுறித்து குடோன் மேலாளர் இந்துஸ்ரீ வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து இரும்பு ராடு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

