/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உடலில் மின்சாரம் பாய்ச்சி ஐ.டி., ஊழியர் தற்கொலை
/
உடலில் மின்சாரம் பாய்ச்சி ஐ.டி., ஊழியர் தற்கொலை
ADDED : செப் 22, 2024 12:31 AM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 50. இவர், பல்லாவரம் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ஜெயராணி, இரண்டு குழந்தைகள்உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கார்த்தி கேயன் வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு, தனக்குத்தானே மின்சாரத்தை பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி வந்து பார்த்த போது, கதவுபூட்டப்பட்டு இருந்தது.
நீண்ட நேரம் கதவை திறக்காததால், அருகே இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.
பின், உடலில் பாய்ந்துக்கொண்டிருந்த மின்சாரத்தை துண்டித்தனர். தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், அறையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், 'தனக்கு செய்வினை செய்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ள போகிறேன்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.