/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் 'சகாச' பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்
/
மாணவர்கள் 'சகாச' பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்
மாணவர்கள் 'சகாச' பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்
மாணவர்கள் 'சகாச' பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்
ADDED : அக் 12, 2024 12:05 AM

திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பொதட்டூர்பேட்டை, அருங்குளம், கோணசமுத்திரம், சிவாடா, வீரமங்கலம், நல்லாட்டூர், மகான்காளிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அளவில் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, அருங்குளம், சிவாடா மற்றும் நல்லாட்டூர் ஆகிய பகுதிகளுக்கு தலா இரு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் மூலம் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருத்தணி அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேனிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் மேற்கண்ட வழித்தடங்களில் மாணவர்கள் படி மற்றும் ஜன்னல் கம்பிகள் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
சில மாணவர்கள் வேண்டும் என்றே படியில் நின்று ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாக நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' திருத்தணி அரசு கலைக் கல்லுாரிக்கு மட்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை, 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் கல்லுாரி மாணவர்கள் ஒரே குறிப்பிட்ட பேருந்தில் ஏறுவதால் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.