/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி அளித்து 5 ஆண்டுகளாச்சு... குடிநீர் குழாய் பணி என்னாச்சு! ஊராட்சி கணக்கில் தூங்கும் ரூ.21 லட்சம் நிதி

ADDED : ஏப் 19, 2025 09:58 PM
திருவள்ளூர்:புட்லுார் குடிநீர் குழாய் பணிக்காக ஒதுக்கப்பட்ட 21.60 லட்சம் ரூபாயை செலவழிக்காமல், ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி நிதியில் தூங்கி வருகிறது.
திருவள்ளூர் வட்டம் புட்லுார் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு, காக்களூர் - அரண்வாயல் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு, சாலையும் அமைக்கப்பட்டது.
மேலும், சாலையோரம் புட்லுார் ஊராட்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் பதிக்க, 2019 - 21ம் ஆண்டு 'நபார்டு' திட்டத்தில், 21.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை அப்பணி துவக்கவில்லை.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் சட்டத்தில் பணிக்கு ஒதுக்கிய நிதி குறித்து விளக்கம் கேட்டார். மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் அதற்கு அளித்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
புட்லுார் ஊராட்சியில், 'நபார்டு' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்க, 21.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் குழாய் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்படாததால், பணிகள் துவங்கவில்லை. மேலும், 'நபார்டு' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, புட்லுார் ஊராட்சி கணக்கு எண்: 3ல் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, புட்லுார் ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 'நபார்டு' ஒதுக்கிய நிதி, ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி கணக்கில் செலவழிக்கப்படாமல் இருப்பது தெரியவந்ததுள்ளது. எனவே, குழாய் பதிக்கும் பணியை துவங்கி, கிராமவாசிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.