/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லி கற்கள் கொட்டி ஓராண்டாச்சு... சாலை அமைப்பது எப்போ ஆபீசர்ஸ்?
/
ஜல்லி கற்கள் கொட்டி ஓராண்டாச்சு... சாலை அமைப்பது எப்போ ஆபீசர்ஸ்?
ஜல்லி கற்கள் கொட்டி ஓராண்டாச்சு... சாலை அமைப்பது எப்போ ஆபீசர்ஸ்?
ஜல்லி கற்கள் கொட்டி ஓராண்டாச்சு... சாலை அமைப்பது எப்போ ஆபீசர்ஸ்?
ADDED : நவ 25, 2024 02:27 AM

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் பெரியபாளையம், அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், தண்டலம், பருத்திமேனி குப்பம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கிராமங்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்டோர், இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, சுகாதார நிலைய வளாகத்தில் சாலை வசதி இல்லை. இதனால், நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது.
கடந்தாண்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், பெரியபாளையம் அரசு சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இவரது வருகையை ஒட்டி, சுகாதார நிலைய வளாகத்தைச் சுற்றிலும், ஜல்லிக்கற்கள் கொட்டி அவசரகதியில் சமன்படுத்தினர்.
அதன்பின், சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஜல்லிக்கற்களால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் நடந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இங்கு, மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.