/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெயர் நீக்கி ஆறு மாசமாச்சு! புது ரேஷன் கார்டு எப்போது?
/
பெயர் நீக்கி ஆறு மாசமாச்சு! புது ரேஷன் கார்டு எப்போது?
பெயர் நீக்கி ஆறு மாசமாச்சு! புது ரேஷன் கார்டு எப்போது?
பெயர் நீக்கி ஆறு மாசமாச்சு! புது ரேஷன் கார்டு எப்போது?
ADDED : ஏப் 06, 2025 10:57 PM
திருவாலங்காடு:திருத்தணி தாலுகாவில் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மணவூர், பூனிமாங்காடு, செருக்கனுார், திருத்தணி உட்பட ஆறு குறுவட்டங்களில், 90க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இங்கு, திருமணம் நடந்த ஏராளமானோர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் நாள்தோறும் அலுவலகங்களுக்கு சென்று, கார்டு வந்து விட்டதா என தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது-:
கார்டு இல்லாததால், எந்த பணிகளுக்கும் விண்ணப்பிக்கவும், முக்கிய தேவைகளுக்கு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க முடியவில்லை. இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை.
ஏற்கனவே, பெற்றோர் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பின்னரே, புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம். பெயர்களை நீக்கி ஆறு மாதமாகி விட்டது. தற்போது, எங்களது பெயர்கள் எதிலும் இல்லாத நிலை உள்ளது.
எனவே, புதிய ரேஷன் கார்டுகளை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

