ADDED : டிச 14, 2025 06:40 AM

அ நிறம் | அளவு
திருவள்ளூர்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகில், ஜாக்டோ - ஜியோ சார்பில், தி.மு.க.,வின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று, மார்ச் 2003ம் ஆண்டுக்கு பின், அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.
