/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ போராட்டம்
/
கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ போராட்டம்
ADDED : பிப் 15, 2025 01:44 AM

திருத்தணி:திருத்தணியில், நேற்று மாலை, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நடத்தினர்.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தது போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சரண் விடுப்பு ஒப்படைப்பு உடனே வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்,
ஊதிய முரண்பாட்டை கலைக்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

