ADDED : பிப் 17, 2025 02:07 AM

மப்பேடு:கடம்பத்துார் அடுத்த, வைசாலி நகரைச் சேர்ந்தவர் டில்லபாபு, 27; இவர், கடந்த 14ம் தேதி, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு, 'ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
தொடுகாடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இயற்கை உபாதைக்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், டில்லிபாபுவை மிரட்டி அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதுகுறித்து நேற்று முன்தினம், டில்லிபாபு அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் டில்லிபாபுவிடம் பணம் பறித்தவர் தொடுகாடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 20, என, தெரிய வந்தது.
இதையடுத்து, பிரகாஷ்ராஜை கைது செய்த மப்பேடு போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.