/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி
/
துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி
ADDED : பிப் 22, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி ஜோதி, 50. இவர், நெடுங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, மதியம் 2:00 மணியளவில், திடீரென மயங்கி விழுந்தார்.
உடன், அங்கிருந்தவர்கள் அவரை பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.