ADDED : அக் 09, 2025 10:26 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஒரே நாள் இரவில் மூன்று வீடுகளின் பூட்டுகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பெரியகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 36.
நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, ஒன்றரை சவரன் நகை, 70 கிராம் வெள்ளி பொருட்கள், 4,000 ரூபாயை திருடி சென்றனர்.
மேலும் அதே கிராமத்தில், குமார், 60, என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 10,000 ரூபாயை திருடி சென்றனர்.
அருகில், குருவி அகரம் கிராமத்தை சேர்ந்த சரளா, 43, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு சவரன் நகை, 3,000 ரூபாயை திருடி சென்றனர்.
ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.