தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அடிப்படை வசதிகள் இல்லாத கடம்பத்துார் ரயில் நிலையம்

அடிப்படை வசதிகள் இல்லாத கடம்பத்துார் ரயில் நிலையம்

அடிப்படை வசதிகள் இல்லாத கடம்பத்துார் ரயில் நிலையம்


ADDED : பிப் 27, 2024 08:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 08:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடம்பத்துார்:கடம்பத்துார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை கடம்பத்துார், கசவநல்லாத்துார், புதுமாவிலங்கை, பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, பிரையாங்குப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மற்றும் மாணவ - மாணவியர் சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில் நிலைய நுழைவு பகுதியில் கட்டண கழிப்பறையும் பயன்பாடில்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கழிப்பறைகள் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறிவிட்டது.

இதனால் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என, பயணியர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் மேற்கூரையும் முறையாக அமைக்கப்படாததால் பயணியர் மழை நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே கடம்பத்துார் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us