/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டுவெடி வெடித்து நாய் பலி காஞ்சி வாலிபர் சிக்கினார்
/
நாட்டுவெடி வெடித்து நாய் பலி காஞ்சி வாலிபர் சிக்கினார்
நாட்டுவெடி வெடித்து நாய் பலி காஞ்சி வாலிபர் சிக்கினார்
நாட்டுவெடி வெடித்து நாய் பலி காஞ்சி வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூலை 23, 2025 02:07 AM

திருத்தணி:நாட்டுவெடி வெடித்து நாய் உயிரிழந்த சம்பவத்தில், நாட்டுவெடி பதுக்கி வைத்திருந்த காஞ்சிபுரம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம், 35. இவர், திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி பகுதியில் தங்கி, வனப்பகுதியை ஒட்டி பண்ணை அமைத்து, 40க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்த்து வருகிறார்.
மேலும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக, வீட்டில் நாட்டுவெடிகளை பதுக்கி வைத்திருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, செல்வம் தங்கியிருந்த வீட்டில் இருந்த நாட்டு வெடியில் ஒன்றை, நாய் கவ்விக் கொண்டு தெருவிற்கு வந்தது. அப்போது நாட்டுவெடி வெடித்ததில் நாய் உயிரிழந்தது.
தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார், செல்வத்தை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட நாட்டுவெடிகள் மற்றும் வெடி மருந்துகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நாட்டுவெடியில் ஆட்டுக் கொழுப்பை தடவி காட்டுப் பகுதியில் வைத்து விட்டால், அதை பன்றிகள் மற்றும் நரிகள் உண்ணும்போது, வெடித்து பலியாகிவிடும்.
இறந்த பன்றி மற்றும் நரிகளை விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. செல்வத்தை கைது செய்த போலீசார், திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.