/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டுச்சாண சாலையாக மாறிய கண்ணுார் சாலை
/
மாட்டுச்சாண சாலையாக மாறிய கண்ணுார் சாலை
ADDED : டிச 27, 2024 01:36 AM

கண்ணுார்:கடம்பத்துார் ஒன்றியம், கண்ணுார் ஊராட்சியிலிருந்து, கல்லம்பேடு செல்லும் இணைப்பு சாலை, தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ. 67.48 லட்சம் மதிப்பீல், ஆறு மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
இப்பகுதிவாசிகள் கால்நடை வளர்ப்பையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் வீடுகளில் கட்டாததால் சாலையிலேயே சுற்றி திரிந்து இளைப்பாறுகின்றன. இதனால், சீரமைக்கப்பட்ட சாலை உட்பட பல பகுதிகளில் மாட்டுச் சாணம் பரவிக் கிடக்கின்றன.
தற்போது, மழை பெய்து வருவதால் மாட்டுச்சாணம் மழைநீரில் கலந்து சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால் பகுதிவாசிகள், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் நடந்துகூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் கால்நடைகளை வளர்க்கும் பகுதிவாசிகளிடம் வீடுகளில் கால்நடைகளை கட்டவும் சாணத்தை அகற்றி சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

