/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் ரப்பர் தொழிற்சாலையை காரம்பேடு பெண்கள் முற்றுகை
/
தனியார் ரப்பர் தொழிற்சாலையை காரம்பேடு பெண்கள் முற்றுகை
தனியார் ரப்பர் தொழிற்சாலையை காரம்பேடு பெண்கள் முற்றுகை
தனியார் ரப்பர் தொழிற்சாலையை காரம்பேடு பெண்கள் முற்றுகை
ADDED : பிப் 03, 2024 11:42 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே காரம்பேடு கிராமத்தில், 'டீனா ரப்பர்' என்ற பெயரில்ஒ தனியார் ரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
நேற்று, அந்த தொழிற்சாலையை, காரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, 40 பெண்கள், முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை, மக்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்து வருகிறது. இதனால், மூச்சுத் திணறல் உட்பட ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. பலமுறை அரசிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இந்த தொழிற்சாலையை மூட வேண்டும்' என்றனர்.
தகவல் அறிந்து சென்ற பாதிரிவேடு போலீசார், பெண்களிடம் சமாதானம் பேசினர்.
நச்சுப் புகை வெளியேறுவது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், சமாதானம் அடைந்த பெண்கள் கலைந்து சென்றனர்.