தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காரனோடை இணைப்பு சாலை சேதம்

காரனோடை இணைப்பு சாலை சேதம்

காரனோடை இணைப்பு சாலை சேதம்


ADDED : பிப் 20, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவரம்:சென்னை - கோல்கட்டா சாலையில், சோழவரம் அடுத்த, ஆத்துார் பகுதியில் இருந்து, காரனோடை மேம்பாலம் வழியாக, ஜனப்பசத்திரம் செல்லும் இணைப்பு சாலையில், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும், கரடு முரடாக இருக்கிறது.

சேதம் அடைந்த பகுதிகளை வாகனங்கள் கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. இருசக்கர வாகனங்கள் சரளை கற்களில் சிக்கி தவிக்கின்றன.

இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துக்களுக்கும் உள்ளாகின்றனர். பெயர்ந்து கிடக்கும் சரளை கற்கள் மீது, கனரக வாகனங்கள் செல்லும்போது அப்பகுதியில் புழுதி பறக்கிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் சுகாதார பாதிப்புகளை உண்டாக்கிறது.

காரனோடை மேம்பாலம் - ஆத்துார் இடையே உள்ள இணைப்பு சாலையில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us