/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கராத்தே 'பிளாக் பெல்ட்' 18 வீரர்கள் தேர்வு
/
கராத்தே 'பிளாக் பெல்ட்' 18 வீரர்கள் தேர்வு
ADDED : ஆக 04, 2025 11:17 PM

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், 18 கராத்தே வீரர் -- வீராங்கனையர், கருப்பு பட்டைக்கு தகுதி பெற்று, 'பெல்ட்' பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் மற்றும் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில், ஆண்டு 'கிரேடிங்' தேர்வு, பாலவேடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், திருநின்றவூர், பட்டபிராம், முத்தா புதுப்பேட்டை, பாலவேடு, ஆவடி மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட இடங்களில் பயிற்சி பெற்ற, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகுதி, வயது அடிப்படையில் வெள்ளை, மஞ்சள், பச்சை, பிரவுன், கருப்பு என, பட்டைகள் வழங்கப்பட்டன. அதில், 18 பேர் கருப்பு பட்டைக்கும், 32 பேர் பல்வேறு நிற பட்டடைகளுக்கும் தேர்வாகினர்.
தேர்வானோருக்கு, திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க தொழில்நுட்ப இயக்குநர் விஜயராகவன் பரிசுகளை வழங்கினார். நடுவர்கள் ரமேஷ் குமார், தியாகராஜன் தனித்திறன் சோதனையை செய்தனர்.