/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கத்தில் கராத்தே போட்டி
/
பேரம்பாக்கத்தில் கராத்தே போட்டி
ADDED : டிச 30, 2024 01:33 AM

பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 'ஹிக்வோஸி' கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், கடம்பத்துார் வட்டார அளவிலான கராத்தே போட்டி நேற்று நடந்தது.
பேரம்பாக்கம், கடம்பத்துார், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஐந்து வயது முதல், ஆண், பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி அடிப்படையில் ஆறு மாதம் முதல், மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்களுக்கு தகுதிக்கேற்ப போட்டிகள் நடத்தப்பட்டு, பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பேரம்பாக்கம் கராத்தே மாஸ்டர் அங்கப்பன் முன்னிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பரமேஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பேரம்பாக்கம் இந்தியன் வங்கி அலுவலர் சிலம்பரசன், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளருமான திவாகர் சுயம்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.