/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாமல்லை கடலில் குளித்த கர்நாடக வாலிபர் மாயம்
/
மாமல்லை கடலில் குளித்த கர்நாடக வாலிபர் மாயம்
ADDED : ஜன 27, 2025 11:34 PM
மாமல்லபுரம்,
கர்நாடக வாலிபர், மாமல்லபுரம் கடலில் மூழ்கி மாயமானார்.
கர்நாடக மாநிலம், மல்லுார் தாலுகா, புராலம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர், மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் வழிபட, தமிழகம் வந்தனர்.
அங்கு செல்லும் முன், கடலில் நீராட கருதி, நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்கள், கடற்கரை கோவில் அருகில், காலை 9:00 மணியளவில் கடலில் குளித்த போது நவீன், 24, ரஞ்சித், 27, முரளி, 29, ஆகியோர் அலையில் சிக்கி, நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பேரூராட்சி உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜ் என்பவர், மிதவை உதவியுடன் இரண்டு பேரை காப்பாற்றி, உயிருடன் மீட்டார். நவீன் நீரில் மூழ்கி மாயமானார்.
மாமல்லபுரம் போலீசார் தேடுகின்றனர்.

