/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கவரைப்பேட்டை பள்ளி மாணவர்கள்
/
28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கவரைப்பேட்டை பள்ளி மாணவர்கள்
28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கவரைப்பேட்டை பள்ளி மாணவர்கள்
28 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கவரைப்பேட்டை பள்ளி மாணவர்கள்
ADDED : ஜன 07, 2025 07:23 AM

கும்மிடிப்பூண்டி :  கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 1995- - 96ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் சந்தித்து கொண்டனர்.
பல்வேறு இடங்களில் வசித்து வரும் அவர்கள், 28 ஆண்டுகளுக்கு பின், ஒன்று கூடி பசுமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
அரசு துறை வேலை, தனியார் வேலை, தொழிலதிபர்கள், இல்லத்தரசிகள், சுயதொழில் செய்பவர்கள் என, தற்போது பல்வேறு துறையில் உள்ள, 120 முன்னாள் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
சந்தித்து கொண்டதன் நினைவாக, பள்ளிக்கு, 10,000 ரூபாய் மதிப்புள்ள பீரோ ஒன்றை, தற்போதைய தலைமை ஆசிரியர் அய்யப்பனிடம் வழங்கினர்.
முன்னாள் வகுப்பு ஆசிரியர்கள் செல்வம், ஆறுமுகம், அண்ணாமலை, நாராயணன், பழனி, பானுரேகா ஆகியோருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.