/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீச்சலம் ஏரி மதகு சேதம் வீணாக வெளியேறும் தண்ணீர்
/
கீச்சலம் ஏரி மதகு சேதம் வீணாக வெளியேறும் தண்ணீர்
ADDED : பிப் 10, 2025 02:43 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி காப்புக்காட்டில் ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த காடு மற்றும் அதையொட்டிய மலைப்பகுதி சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகின்றன.
இந்த காப்புக்காட்டில் இருந்து உருவாகும் ஓடைகள் வாயிலாக கீச்சலம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. கடல் போல பரந்து விரிந்துள்ள இந்த ஏரி, ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வருகிறது.
தற்போதும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகின்றன.
இந்நிலையில், ஏரியின் மதகு ஒரு பகுதியில் சேதம் அடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. ஆறாக பாய்ந்து செல்லும் நீரால், ஏரியின் நீர்மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.
இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏரி மதகு பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

