/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது
/
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை ஏர்போர்ட்டில் கைது
ADDED : ஜன 01, 2024 06:25 AM
சென்னை: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் செரியாலீசத், 40.
கடந்த 2015ல் இவர் மீது மலப்புரம், குருவரகுண்டு காவல் நிலையத்தில், பெண் ஒருவர் புகார் அளித்தார்.
புகாரின்படி வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், சையத் இப்ராஹிம் செரியாலீசத்தை தேடி வந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பியதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து, சென்னைக்கு 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது, ஒன்பது ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சையத் இப்ராஹிம் செரியாலீசத்தை கண்டுபிடித்து, தனியறையில் அடைத்து, கேரள போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதை தொடர்ந்து, கேரள தனிப்படை போலீசார் சென்னை வருகின்றனர்.