/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா மூட்டையுடன் திரிந்த கேரள வாலிபர் கைது
/
கஞ்சா மூட்டையுடன் திரிந்த கேரள வாலிபர் கைது
ADDED : பிப் 16, 2024 12:01 AM
பரங்கிமலை:மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வந்ததை அடுத்து, பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் சிவா ஆனந்த் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கீழ்க்கட்டளை பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் சிறு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரிக்க முயன்றபோது தப்பியோடினார்.
அவரை மடக்கி பிடித்து, மூட்டையை சோதனையிட்டதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த விஷ்ணு, 27, என்பது தெரியவந்தது.
கஞ்சா போதைக்கு அடிமையான இவர் வேலை எதுவும் இல்லாததால், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.