/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் :232 வீராங்கனையர் பங்கேற்பு
/
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் :232 வீராங்கனையர் பங்கேற்பு
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் :232 வீராங்கனையர் பங்கேற்பு
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் :232 வீராங்கனையர் பங்கேற்பு
ADDED : டிச 08, 2025 06:20 AM

சென்னை: 'கேலோ இந்தியா - அஸ்மிதா' கிக் பாக்சிங் போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வீராங்கனையர் உட்பட 232 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம், இந்திய கிக் பாக்சிங் கூட்டமைப்பு இணைந்து, 'கேலோ இந்தியா - அஸ்மிதா' கிக் பாக்சிங் போட்டியை, திருச்சியில் நேற்று நடத்தின.
சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரத்தைச் சேர்ந்த ஆறு வீராங்கனையர் உட்பட வேலுார், தேனி, கடலுார் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 232 வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் முடிவில், பிரிவு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதலிடத்தை பிடித்த வீராங்கனையர் மட்டும், பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடக்கும் தென் மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.