/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
/
டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 14, 2024 09:34 PM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில், நேற்று மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளியின் தாளாளர் தமிழரசன் தலைமையில் நடந்த விழாவில், டி.ஜெ.எஸ்., கல்வி குழும நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ஏழுமலை, பள்ளியின் முதல்வர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
விழாவின் போது, அந்த பள்ளியில் யூ.கே.ஜி., முடித்து முதலாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற, 66 மழலையருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நடந்தன.