/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமையல் அறை கட்டும் பணி 6 அரசு பள்ளிகளில் துவக்கம்
/
சமையல் அறை கட்டும் பணி 6 அரசு பள்ளிகளில் துவக்கம்
ADDED : ஜன 20, 2025 11:56 PM
திருத்தணி,
திருத்தணி ஒன்றியத்தில், தெக்களூர், சிறுகுமி, கோரமங்கலம், கிருஷ்ணசமுத்திரம், பெரியகடம்பூர் மற்றும் கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்கு போதிய சமையல் அறைகள் இல்லாமல் திறந்த வெளியில் சமைத்து வந்தனர்.
இந்நிலையில், மதிய உணவு திட்டத்தின்கீழ், மேற்கண்ட பள்ளிகளுக்கு, தலா, 6.96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒன்றியத்தில், ஆறு பள்ளிகளில், புதியதாக சமையல் அறைகள் கட்டுவதற்கு, கடந்த வாரம் டெண்டர் விடப்பட்டுள்ளன. இப்பணிகள், ஓரிரு நாளில் துவங்கி, மூன்று மாதத்திற்குள் சமையல் அறைகள் கட்டி பயன்பாட்டிற்கு விடப்படும். இதுதவிர, ஒன்றியத்தில் உள்ள, 98 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமையல் அறை கட்டடம் பழுது பார்த்தல் பணி, புதிய கட்டடம் கட்டுவதற்கும் சர்வே செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

