/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை கிடங்காக மாறிய கூவம் நீர்வரத்து கால்வாய்
/
குப்பை கிடங்காக மாறிய கூவம் நீர்வரத்து கால்வாய்
ADDED : அக் 02, 2024 02:17 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் அருகே அரண்வாயல் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே செல்லும் நீர்வரத்து கால்வாய் வழியாக பயணித்து, கூவம் ஆற்றை சென்றடைகிறது.
இந்த நீர்வரத்து கால்வாய், போதிய பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. தற்போது, இந்த நீர் வரத்து கால்வாய் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால், கூவம் ஆறு கழிவுநீர் ஆறாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்வள ஆதாரத் துறையினர் அரண்வாயல் பகுதியில் ஆய்வு செய்து, புதர்மண்டி குப்பை கொட்டும் இடமாக மாறிவரும் கூவம் ஆற்றிற்கு வரும் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.