/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொரட்டூர் எபினேசர் பள்ளி வீரர் இரட்டைசதம் அடித்து சாதனை
/
கொரட்டூர் எபினேசர் பள்ளி வீரர் இரட்டைசதம் அடித்து சாதனை
கொரட்டூர் எபினேசர் பள்ளி வீரர் இரட்டைசதம் அடித்து சாதனை
கொரட்டூர் எபினேசர் பள்ளி வீரர் இரட்டைசதம் அடித்து சாதனை
ADDED : ஜன 31, 2025 02:54 AM

சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன.
அந்த வகையில், தாம்பரம், தனலட்சுமி கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கொரட்டூர் எபினேசர் பள்ளி மற்றும் கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி பள்ளி அணிகள் மோதின.
தடுமாற்றம்
இதில், முதலில் பேட் செய்த எபினேசர் பள்ளி அணி, துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால், பந்து அடிக்கடி எல்லைக் கோட்டை தாண்டின.
இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 365 ரன்கள் குவித்தது. அணி வீரர் வெற்றிச்செல்வன், 91 பந்துகளில், 14 சிக்சர், 18 பவுண்டரிகளுடன், 218 ரன்கள்விளாசினார்.
கடினமான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய பவன்ஸ் ராஜாஜி அணி, கொரட்டூர்எபினேசர் பள்ளி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமலும், ரன் எடுக்க முடியாமலும் தடுமாறினர்.
பெரும்பாலும், விக்கெட் தக்க வைப்பதற்காகவே தடுப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த அணி 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 53 ரன்கள் மட்டுமே அடித்து, 312 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சர் முத்தா வீரர் சதம்
மற்றொரு போட்டியில், சர் முத்தா பள்ளி 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் அஸ்வதா ராம், 98 பந்துகளில், ஒரு சிக்சர், 16 பவுண்டரிகளுடன், 135 ரன்கள் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி, 30 ஓவர்களில் 101 ரன்கள்மட்டுமே அடித்துதோல்வியடைந்தது.