/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியம் குளமான உயர்நிலை பள்ளி வளாகம்
/
பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியம் குளமான உயர்நிலை பள்ளி வளாகம்
பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியம் குளமான உயர்நிலை பள்ளி வளாகம்
பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியம் குளமான உயர்நிலை பள்ளி வளாகம்
ADDED : நவ 03, 2025 10:25 PM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியத்தால், இரவு முழுதும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழிந்த குடிநீர், உயர்நிலை பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளது.
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அரசு நிதியுதவி யுடன் இயங்கும் இப்பள்ளி யில், 6 - 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி அருகே, பேரூராட்சி நிர்வாகத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் நீர், செட்டித்தெரு, சாவடித்தெரு, கிருஷ்ணா குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
பேரூராட்சி ஊழியர்கள், காலை - மாலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி, மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்கின்றனர்.
சமீபகாலமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. நேற்று முன்தினம் தொட்டி நிரம்பி, சாலையில் பெருக் கெடுத்து ஓடியது.
இந்த தண்ணீர் அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியது. ஞாயிறு விடுமுறை முடிந்து வந்த மாணவர்கள், ஆபத்தான முறையில் தண்ணீரில் நடந்து வகுப்பறைகளுக்கு சென்றனர்.
மேலும், இந்த தண்ணீரில் கொசுக்கள் உருவாகி, மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தை சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

