/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேணுகோபால் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
/
வேணுகோபால் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 10, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி வேணுகோபால் சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்மிடிப்பூண்டி தபால் தெருவில் அமைந்துள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு விமான கோபுரம் அமைக்கப்பட்டது.
கடந்த 7ம் தேதி கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலை புனிதநீர் கொண்டு நேற்று விமான கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.