ADDED : பிப் 18, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தில் உள்ள பயணியரை சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவரின் பையில், 6 கிலோ 400 கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன.
போலீசார் அவரை விசாரித்ததில், ஸ்ரீபெரும்புதுார் கிருஷ்ணன், 50, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.