தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

 சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி

 சரக்கு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி பலி


ADDED : ஜன 22, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில் வசித்தவர் வெங்கடேசன், 38; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், பொன்னேரியில் இருந்து பெருவாயல் நோக்கி 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

பெருவாயல் கிராமத்தில் வலதுபுறம் திரும்ப முயன்றபோது, அதே திசையில் பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதி படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us