/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு அரசு பள்ளிகளில் தேர்வு அறையில் 'டெஸ்க்' பற்றாக்குறை
/
திருவாலங்காடு அரசு பள்ளிகளில் தேர்வு அறையில் 'டெஸ்க்' பற்றாக்குறை
திருவாலங்காடு அரசு பள்ளிகளில் தேர்வு அறையில் 'டெஸ்க்' பற்றாக்குறை
திருவாலங்காடு அரசு பள்ளிகளில் தேர்வு அறையில் 'டெஸ்க்' பற்றாக்குறை
ADDED : பிப் 16, 2024 07:29 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 760 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை 154 மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு நடைப்பெற உள்ளது.
அதற்காக 10 அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. அதில் மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுத 100 டெஸ்குகள் உள்ளன.
அதேபோன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வை திருவாலங்காடு அரசு மேல்நிலை பள்ளி, பெரியகளக்காட்டூர் ஆதிதிராவிட நல உயர்நிலை பள்ளி மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் என மொத்தம் 360க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.
அவர்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்வு துவங்கி ஏப்., 9ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. 18 அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. ஆனால் தேர்வு எழுதும் மாணவர்கள் அமர 10 அறைகளில் மட்டுமே டெஸ்குகள் உள்ளன.
மீதம் எட்டு அறைகளுக்கு தேவையான 80 டெஸ்குகள் அருகே உள்ள பள்ளிகளில் இருந்து கொண்டு வரும் நிலை, 16 ஆண்டுகளாக உள்ளது.
டெஸ்கு பற்றாக்குறை குறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கையில்லை என, பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.